Guru Peyarchi Palan

Guru Peyarchi Palan

    VIRUCHIKAM Guru Peyarchi Palan

விருச்சிக ராசி நேயர்களே, இதுவரையில் உங்கள் விருச்சிக ராசிக்கு ஐந்தாமிடமான மீன ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான் அங்கிருந்து ஆறாமிடமான மேஷ ராசிக்கு 22-04-2023 அன்று மாறுகிறார். (6-ம் இடத்து குரு காரியங்களில் தடங்களை ஏற்படுத்தும்.) 6-ல் குரு அமருவது சிரமம் என்றாலும் அவரது சிறப்பு பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பெரியளவில் பிரச்சனை ஏதும் இருக்காது. மேலும் பண பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகள் குறைத்துக்கொள்ள முடியும். குடும்ப தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்து கொள்ள முடியும். குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு 6 ம் பாவமான எதிரிகள், கடன்கள், நோய்கள் ஆகிய காரகத்துவங்களைக் குறிக்கும் ஸ்தானத்தில் ராசி நாதன் வரும் போது எதிரிகளின் தொல்லை நீங்கும், கடன்களை திரும்ப அடைக்கும் நிலை உருவாகும், உடல் உபாதைகள் நீங்கும். ருண ரோக சத்ரு குரு விருச்சிக ராசிக்காரர்களே. குரு பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். இது ருண ரோக சத்ரு ஸ்தானமாகும். கடன் எதிரி தொந்தரவு கட்டுக்குள் இருக்கும். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது விழுவதால் குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். 12ஆம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் சிலருக்கு நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். குரு 5 ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 10 மிடத்தை பார்க்க போவதால் செய் தொழில் முன்னேற்றம் கொடுக்கும். குரு 7 ம் பார்வையாக ராசிக்கு 12 ம் பாவத்தை பார்க்கப் போவதால் வீண் விரையங்கள் குறையும், சுப செலவுகள் அதிகளவில் இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வரும் பாக்கியம் கிட்டும். குரு 9ம் பார்வையாக ராசிக்கு 2 ம் இடத்தை பார்க்கப் போவதால் வாக்கு வன்மை அதிகரிக்கும் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் அமைதியான சூழ் நிலை நிலவும். பொருள் சேர்க்கை, வங்கி சேமிப்பு அதிகரிப்பு, சொத்துகள் வாங்கும் யோகம் வரும். ஒரு காரியத்தை திட்டமிட்டு செய்யலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் சிறு சிறு சண்டைகள் உண்டாகலாம். பயணங்கள் சாதகமான பலன் தரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். சுப காரியங்களில் இருந்த தடங்கல்கள் நீங்கும். மனக்கவலை நீங்கி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகமும், அவர்களால் நன்மையையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக பட்ட கஷ்டங்கள் மறைந்து ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு மரியாதை கூடும். பணம் ஒரு புறம் வந்தாலும், செலவுகள் பின் தொடரும். திருமண தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும். குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் சில தொல்லைகள் இருக்கும். பழைய கடன்களால் மனக்கவலை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். புதிய கடனை மேற்கொண்டு வாங்காமல் இருப்பது நல்லது. புதியவர்களை நம்பி எந்த முடிவையும் எடுக்கவேண்டாம். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதையும் கூடும். வதந்திகளை பொறுப்படுத்த வேண்டாம். பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வண்டி, வாகனத்தை சீர் செய்ய முடியும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும், இருப்பினும் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்கவும். ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்துக்கொள்ளவும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை தீரும். உங்கள் ராசிக்கு 4ல் சனி சஞ்சரித்து அர்தாஷ்டம சனி நடப்பதால் உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடிய சூழல் ஏற்படும். மேலும் உங்கள் ராசிக்கு 6ல் ராகு, 12ல் கேது என 30.10.2023 முடியவும் அதன் பின் 5ல் ராகு, 11ல் கேது என சஞ்சாரம் செய்ய இருப்பது சற்று சாதகமான அமைப்பு எனபதால் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். உத்யோகத்தில் அலுவலுக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். தொழில், வியாபாரம் நன்றாகவே நடக்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். இந்த குருப்பெயர்ச்சி நிறைய செலவுகளையும், வீண் அலைச்சல்களையும் தந்து உங்களை வெற்றி பாதையில் அழைத்து செல்லும்.

பரிகாரம் : வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

( For Viruchikam : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Virchagam (Scorpio) [Stars: Visakam 4, Anusham 1,2,3,4 Kettai 1,2,3,4 quarters]

Brave, Bold & Courageous people are born under Virchagam. Wants to travel and enjoy the adventures and keep themselves to become famous and flying colours. Politics, government rankings, sports, military, police, leadership, educations, discovery and other areas they want to enjoy. Feeling happy and once in a while they feel low due to automatic planet transitions. Family situations become favour; but separation due to travel for work/business sometimes bring detachment. Some people become atheist if Jupiter in horoscope is not good. Good fighting spirit & stay well ahead of the allocated jobs are the keys of all improvements and support. Some people are capable to rewrite the history. Loneliness affects them quite often and need refreshment in many occasions. It is important to practice yoga or meditation to keep the stress level under control. Chances of settling life in different place from native.

Powerful new terms, policies & procedures can be defined by virchaga rasi people and able to run worldwide organisations easily to maintain everything on top. Individuals are so intelligent, motivated, who can contribute adequately to any project. Proper care and focused attention required for family matters. Be watchful with friends and know people always will try to grab something. 'Prevention is better than cure' proverb must be considered for health issues and caution required even if it is a small issue. Good health keep fit until 80 years. Mind is highly competitive in any environment to win anything; logical & technical approach winning always. Financial areas are fine and able to give loan or sponsor others for more profits. For some people; ruling the nation or state or organisation possible. Lucky colours are yellow, blue and green, stones are yellow sapphire, pearl and blue sapphire, and numbers are 3 & 8.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.